Enable Javscript for better performance
மைத்துனரைத் தாக்க முயற்சி:  எம்.பி.யின் கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோபியில் மைத்துனரைத் தாக்க முயற்சி செய்ததாக, திருப்பூர் எம்.பி.யின் கணவர் கைது செய்யப்பட்டார்.
    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள கோபிபாளையத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார் சண்முகபிரபு (39). இவர், கோபிசெட்டிபாளையம்,  ஸ்ரீநகரில் உள்ள தனது சகோதரியான திருப்பூர் மக்களவை உறுப்பினர் (அதிமுக) சத்யபாமாவைப் பார்ப்பதற்காக அவரது அலுவலகத்துக்கு வியாழக்கிழமை இரவு  வந்தார். அப்போது, அவர் அலுவலக வாசலில் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, சகோதரியின் கணவர் வாசு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். 
    அவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து சண்முகபிரபுவைத் தாக்க முயற்சித்ததாகவும், அருகில் இருந்த  அவரது நண்பர் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து கோபி போலீஸாரிடம் சண்முகபிரபு புகார் செய்தார்.  
    அந்தப் புகாரின் அடிப்படையில், கோபி போலீஸார் வாசுவைக் கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai