Enable Javscript for better performance
கறவை மாட்டுச் சந்தை: ரூ. 2 கோடிக்கு விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச் சந்தையில் பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுக்குட்டிகள் ஆகியவை சுமார் ரூ. 2 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரிக்கரை சோதனைச் சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதன்கிழமை  வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகளும்  விற்பனை செய்யப்படுகின்றன. 
    வியாழக்கிழமை நடைபெற்ற  சந்தைக்கு அனைத்து மாநில  வியாபாரிகளும், மாடுகள் வரத்தும் கடந்த வாரத்தைப் போலவே இருந்தது. எனினும்,  பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கோடை மழை காரணமாக  கடந்த வாரத்தைவிட  மாடுகள் விற்பனை  குறைவாகவே இருந்தது.
    இதுகுறித்து, மாட்டுச் சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியதாவது:
    தென் மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வழக்கம்போல வந்திருந்தனர். அத்துடன் விவசாயிகளும் சந்தைக்கு வந்திருந்தனர். இந்த வாரச்  சந்தையில் 300 பசு மாடுகள், 250 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. 
     இதில், பசுமாடு ரூ. 16 ஆயிரம் முதல் ரூ. 32 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 34 ஆயிரம் வரையிலும், வளர்ப்புக் கன்றுகள் ரூ. 1,000  முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும் விற்பனையாகியுள்ளன. 
    மொத்தம் சுமார் ரூ. 2 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளதாவும் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai