Enable Javscript for better performance
காஞ்சிக்கோவில் ஸ்ரீதேவி அம்மன் தேர்த் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் ஸ்ரீ தேவி அம்மன் கோயில் தேர்த் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
    பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி அம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் கோயில் குண்டம் விழா, தேர்த் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தேர்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் புதன்கிழமை (மே 16) தொடங்கியது. மே 25-ஆம் தேதி கொடியேற்று விழா நடைபெறுகிறது. 31-ஆம் தேதி குண்டம் திருவிழா, ஜூன் 1-ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
    விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai