Enable Javscript for better performance
கொங்கு கல்வி நிலைய மெட்ரிக் பள்ளியில்100 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கொங்கு கல்வி நிலைய மெட்ரிக் பள்ளியில்100 சதவீதம் தேர்ச்சி

    By DIN  |   Published on : 18th May 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
    இதில், 1200-க்கு 1174 மதிப்பெண் ஒரு மாணவரும், 1150-க்கு மேல் 4 பேரும், 1100-க்கு மேல் 21 பேரும், 1000-க்கு மேல் 73 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 2 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 9 பேரும், வணிகவியல் பாடத்தில் 3 பேரும், பொருளியல் பாடத்தில் 2 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 5 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
    சிறப்பான மதிப்பெண்களுடன் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுத் தந்த மாணவ, மாணவியரை பள்ளித் தலைவர் குப்புசாமி, தாளாளர் செல்வராஜ், பொருளாளர் பெரியசாமி, உதவித் தலைவர்கள் பாலகிருஷ்ணன், சின்னசாமி, நால்ரோடு சுப்பு உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai