Enable Javscript for better performance
சத்தியமங்கலத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சத்தியமங்கலத்தை அடுத்த கோணமூலை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    சத்தியமங்கலம் கோட்டத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி, தாளவாடி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை, கோணமூலையில் தனியார் வளாகத்தில் கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிவேலு தலைமையில், வாகன ஆய்வாளர்கள் பாமாபிரியா ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    இந்த ஆய்வில் அரசு அறிவித்துள்ள 18 வகையான விதிமுறைகளின்படி பள்ளி, கல்லூரி வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்றும், வாகனச் சான்றிதழ்கள் வேகக் கட்டுபாட்டுக் கருவி, தீயணைப்புக் கருவி, முதலுதவிப் பெட்டி, அவசரகால வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.
    பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்களின் அனுபவம் குறித்தும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. 
    பள்ளி வாகன ஓட்டுநர்கள் பள்ளியிலிருந்து குழுந்தைகளை அழைத்து வந்து வீட்டில் விடும் வரை செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்தும், கவனிக்கப்பட வேண்டிய கண்காணிப்புகள் குறித்தும், சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்தும் விபத்துகளைத் தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
    மேலும், அரசு அறிவித்துள்ள 18 விதிமுறைகளின்படி இல்லாத வாகனங்களைத் திருப்பி அனுப்பினர். அந்த வாகனங்களுக்கு மே 31-ஆம் தேதிக்குள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி உள்ள வாகனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
     இந்த ஆய்வில் சத்தியமங்கலம் வட்டாரத்தில் செயல்படும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளிகளின்  200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai