Enable Javscript for better performance
சென்னிமலையில் டெங்கு விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    சென்னிமலை பேரூராட்சி சார்பில், தேசிய டெங்கு நாளையொட்டி 5-ஆவது வார்டுக்கு உள்பட்ட அன்பு நகரில் டெங்கு விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
    இந்நிகழ்ச்சிக்கு, சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் ஹக்கிம் சேட் வரவேற்றார்.  வட்டார மருத்துவ அலுவலர் பிரசன்ன வெங்கட்ரமணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் ஆகியோர் டெங்கு குறித்தும், கொசு ஒழிப்பு குறித்தும்,   நல்ல தண்ணீர் தேங்காமல் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினர். பேரூராட்சி தலைமை எழுத்தர் நல்லதம்பி நன்றி கூறினார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai