Enable Javscript for better performance
நந்தா பொறியியல் கல்லூரிக்கு தேசிய விருது- Dinamani

சுடச்சுட

    

    நந்தா பொறியியல் கல்லூரி (ஐஎஸ்டிஇ) இந்திய தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தின் தேசிய அளவிலான விருதைப் பெற்றுள்ளது. 
    இந்த இயக்கத்தின் சார்பில், பொறியியல் கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும் சிறந்த அத்தியாயத்துக்கான விருது அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நடப்பு ஆண்டுக்கான விருது, சென்னை தாகூர் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற  இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்க பொறியியல் மாணவர்கள் 17-ஆவது  மாநாட்டில்  சிறந்த அத்தியாயத்துக்கான கல்லூரி விருது நந்தா பொறியியல் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது.
    இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்க தாளாளர் நடேசன், இந்திய தொழில்நுட்ப சிறந்த அத்தியாயத்துக்கான தேசிய அளவிலான விருதை  நந்தா பொறியியல் கல்லூரியின் முதல்வர்  ந.ரெங்கராஜன், இயந்திரவியல் துறையின் உதவிப் பேராசிரியர் க.பிரதீப் குமார் ஆகியோரிடம் வழங்கினார். 
    மேலும், 2017-ஆம் ஆண்டின் சிறந்த இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்க மாணவர்கள் விருது நந்தா பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை மாணவி சுஜிலா, முதுகலை வணிக நிர்வாகத் துறை மாணவி வர்ஷினி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தேசிய விருது பெற்ற கல்லூரி முதல்வர், மாணவர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தாளாளர் வி.சண்முகன், செயலாளர் ச.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் ச.திருமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai