Enable Javscript for better performance
பூதப்பாடியில் வணிகர்கள் கலந்தாய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வணிகர்களுக்கு ஒன்றுபட்ட ஒற்றை உரிமம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
     வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகம் மூலம் வழங்கப்படும் ஒன்றுபட்ட ஒற்றை உரிமம்  (U‌n‌i‌f‌i‌e‌d S‌i‌n‌g‌l‌e L‌i​c‌e‌n​c‌e) பெறுவது குறித்த இக்கூட்டத்தில், இவ்வுரிமம் பெறத் தேவையான ஆவணங்கள், நடைமுறைகள் குறித்து விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த உரிமத்தினால் வணிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று பயனடையலாம்.
     ஒவ்வோர் விற்பனைக் குழுவிலும் வணிகர்கள் தனித்தனியாக உரிமம் பெற வேண்டியதில்லை. இவ்வுரிமம் பெறுவதால் வணிகர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது. விவசாயிகளுக்கு தேசிய வேளாண் சந்தையின் (‌e​_‌​N​A​M) மின்னணு ஏலமுறை (‌e​_‌‌t‌r​a‌d‌i‌n‌g) , மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்தும், விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள நன்மைகள் குறித்தும் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொ) க.வீ.குமரேசன்,  கண்காணிப்பாளர் (விளம்பரம்) மு.சீனிவாசன் ஆகியோர் விளக்கினர். 
     இதில், திரளான வணிகர்கள், விவசாயிகள் கலந்துகொண்டதோடு தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai