Enable Javscript for better performance
பூம்புகார் நிலையத்தில் மரச் சிற்பங்கள் சிறப்பு விற்பனைக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    பூம்புகார் நிலையத்தில் மரச் சிற்பங்கள் சிறப்பு விற்பனைக் கண்காட்சி

    By DIN  |   Published on : 18th May 2018 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு  பூம்புகார் விற்பனை நிலையத்தில் மரச்சிற்பங்கள் கண்காட்சி, விற்பனைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
    ஈரோடு - மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் மரச்சிற்பங்கள் கண்காட்சி, விற்பனைக் கண்காட்சியில் அலுவலகங்கள், வீடுகளுக்குத் தேவையான மரத்தால் செய்யப்பட்ட சிற்பங்கள், சந்தன மரச்சிற்பங்கள், நூக்க மரச்சிற்பங்கள், வெண் மரச்சிற்பங்கள், நூக்க மர ஓவியங்கள், மரத்தாலான நகைப் பெட்டிகள், சகரன்பூர் மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருள்கள், சந்தன மரக்கட்டைகள், குழந்தைகளுக்கான மரத்தாலான விளையாட்டுப் பொருள்கள், எண்ணற்ற பரிசுப் பொருள்கள், கலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    இதுகுறித்து, மேலாளர் ஜி.சரவணன் கூறியதாவது:
    கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் இவற்றைப் பேணிக் காக்கும் ஒரு அரசு நிறுவனமாக தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) 
    விளங்கி வருகிறது. 
    கைவினைஞர்களின் வாழ்வாதாரமாகவும், அடுத்த தலைமுறையினர் பின்பற்றும் வகையில் கைவினைக் கலைகளை பொதுமக்களுக்குக் கொண்டு சென்று நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் கைவினைக் கலைகள் மூலம் அவர்களுக்கு அறியப்படுத்தி பயன்பெறும் வகையிலும், கைவினைக் கலைகள் அழிந்துவிடாமல் அதற்கு உயிர் கொடுத்து காப்பதற்கு பல முயற்சிகளை செம்மையாக பூம்புகார் நிறுவனம் செய்து வருகிறது. 
    மேலும், கைவினைஞர்களின் பொருள்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இதுபோன்ற பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. மே 29 வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.
    இக்கண்காட்சியில் காட்சிக்கும், விற்பனைக்கும் உள்ள பொருள்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. 
    குறைந்தபட்சமாக ரூ. 50 முதல் ரூ. 1  லட்சம் வரையில் கைவினைப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வித சேவைக் கட்டணமும் இன்றி கடன் அட்டைகளுக்கான பரிவர்த்தனை செய்யலாம். அனைத்துக் கலைப் பொருள்களுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி உண்டு. 
    மே 15 முதல் 29-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.    அழகிய கலைப் பொருள்களை மக்கள் வாங்கி தங்கள் இல்லங்களுக்கு மேலும் அழகு சேர்ப்பதன் மூலம் இச்சிற்பங்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவ முடியும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai