Enable Javscript for better performance
முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பவானியில் வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த முதியவரை ஏமாற்றி ரூ. 50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
    பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை, வேதகிரிபுரத்தைச் சேர்ந்தவர் அய்யம் பெருமாள் (67). விவசாயியான இவர், பவானி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ. 50 ஆயிரத்தைப் பையில் போட்டு எடுத்து வந்தார். வங்கிக்கு வெளியே நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தில் பையை வைத்துவிட்டு புறப்படத் தயாரானார். 
    அப்போது, கீழே தரையில் ரூ. 10 பணத்தாள்கள் சிதறிக் கிடந்துள்ளது. இதைக் கண்டு, இருசக்கர வாகனத்தை நிறுத்திய அய்யம்பெருமாள் கீழே கிடந்த பணத்தை எடுத்துக் கொண்டு வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணப் பையைக் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அய்யம்பெருமாள் கூக்குரல் எழுப்பினார். இதுகுறித்து, பவானி போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
    சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் விசாரணை நடத்தியதோடு, முதியவரிடமிருந்து பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர்.
    மேலும், வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, வெளிப் பகுதியில் கடைகள் முன்பு வைக்கப்பட்டுள்ள கேமரா காட்சிகளைப் பெற்று விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai