Enable Javscript for better performance
ரூ. 1.36 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 1.36 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோட்டில் ரூ. 1.36 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.
    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சூரம்பட்டி பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 10 பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ.-வும், முன்னாள் அமைச்சருமான கே.வி.இராமலிங்கம், கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன் ஆகியோர் கலந்துகொண்டு இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தனர்.
    இதேபோல, ஈரோடு, மரப்பாலம் ஆலமரத்து தெரு அருகில் ரூ. 13 லட்சம்  மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திறந்துவைத்தனர். இதைத்தொடர்ந்து,  ஈரோடு, செங்கோடம்பள்ளம் பகுதியில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா, கொல்லம்பாளையம் பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணியை பூமிபூஜையுடன் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன் ஆகியோர் தொடக்கிவைத்தனர். 
    இந்நிகழ்ச்சியில், பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீசன், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், முருகசேகர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai