Enable Javscript for better performance
ரூ. 17.23 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளை பொருள்கள் ஏலம் ரூ. 17.23 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    இங்கு, விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்த 11,984 தேங்காய்களில் சிறியவை ரூ. 9.20 முதலும் பெரியவை ரூ. 16.60 வரையும் என ரூ. 1,26,629-க்கும், 21 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 86.69 முதல் ரூ. 119.75 வரையிலும் என ரூ. 97,809-க்கும், 988 மூட்டை நிலக்கடலை (காய்ந்தது) கிலோ ரூ. 37.16 முதல் ரூ. 44 வரையில் என ரூ. 12,74,184-க்கும் விற்பனையானது. 
     38 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 12.54 முதல் ரூ. 13.04  வரையில் என ரூ. 33,500-க்கும், 20 மூட்டைகள் எள் கிலோ ரூ. 70.69 முதல் ரூ. 78.09 வரையில் என ரூ. 1,04,050-க்கும், 67 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 14.61 முதல் ரூ. 16.53 வரையில் என ரூ. 87,125-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 17,23,297-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai