Enable Javscript for better performance
ரூ. 7 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    கொடுமுடி அருகே உள்ள சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 7 லட்சத்துக்கு நிலக்கடலை புதன்கிழமை விற்பனையானது.
    சிவகிரி பகுதிக்கு உள்பட்ட  விளக்கேத்தி, சிவகிரி, அம்மன்கோயில், கந்தசாமிபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 45 விவசாயிகள் 571 மூட்டைகளில் 18 ஆயிரத்து 308 கிலோ எடையுள்ள நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். 
    இதில், நிலக்கடலை அதிகபட்சமாக கிலோ ரூ. 42.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 37-க்கு ஏலம் போனது. 
    மொத்தம் ரூ. 7 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai