Enable Javscript for better performance
லாரி மோதி இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
    சேலம் மாவட்டம், கொளத்தூர் பாலமலை திம்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் மகன் கண்ணன் (29). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், கண்ணாமூச்சி, பெரியார் நகரைச் சேர்ந்த தனது தாய்மாமன்  முருகன் (45) என்பவருடன்  இருசக்கர வாகனத்தில் திருமணப் பத்திரிகை அடிக்கச் சென்றார். 
    குருவரெட்டியூர் பேருந்து நிலையம் அருகே சென்றபோது அவ்வழியே சென்ற லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில், கண்ணன் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் முருகன் சிகிச்சை  பெற்று வருகிறார்.
    இவ்விபத்து குறித்து அம்மாபேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai