Enable Javscript for better performance
வருவாய்த் தீர்வாய கணக்காய்வு மே 24-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாவட்டத்தில் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய கணக்காய்வு மே 24 முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
    மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் மே 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு பவானி வட்டத்தில்  ஜமாபந்தி பணி தொடங்குகிறது.
    ஜமாபந்தி நடைபெறவுள்ள பகுதிகள் விவரம்:
    பவானி வட்டம் (உள்வட்டங்கள்): மே 24-இல் குறிச்சி, 25, 29-இல் பவானி, 30, 31-இல் கவுந்தப்பாடி. கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் மே 24-இல் காசிபாளையம், 25, 29-இல் கோபி, 30-இல் சிறுவலூர், 31-இல் கூகலூர், ஜூன் 1, 5-இல் வாணிப்புத்தூர், ஈரோடு வட்டத்தில் மே 24, 25-இல் ஈரோடு மேற்கு, 29-இல் ஈரோடு வடக்கு, 30-இல் ஈரோடு கிழக்கு. தாளவாடி வட்டத்தில் மே 24, 25-இல் தாளவாடி. அந்தியூர் வட்டத்தில் மே 24, 25-இல் அம்மாபேட்டை, 29, 30-இல் அந்தியூர், 31-இல் பர்கூர், ஜூன் 1-இல் அத்தாணி.
    சத்தியமங்கலம் வட்டத்தில் மே 24-இல் சத்தி, 25, 29-இல் பவானிசாகர், 30-இல் புன்செய் புளியம்பட்டி, மே 31, ஜூன் 1-இல் அரசூர், ஜூன் 5 -இல் குத்தியாலத்தூர்.
    மொடக்குறிச்சி வட்டத்தில் மே 24, 25-இல் மொடக்குறிச்சி, 29-இல் அரச்சலூர், 30-இல் பூந்துறை.  கொடுமுடி வட்டத்தில் மே 24-இல் கொடுமுடி, 25-இல் கிளாம்பாடி, 29-இல் சிவகிரி. பெருந்துறை வட்டத்தில் மே 24-இல் பெருந்துறை, 25-இல் திங்களூர், 29-இல் காஞ்சிகோவில், 30-இல் வெள்ளோடு, மே 31, ஜூன் 1-இல் சென்னிமலை.
    நம்பியூர் வட்டத்தில் மே 24-இல் நம்பியூர், 25-இல் எலத்தூர், 29-இல் வேமாண்டாம்பாளையம்  ஆகிய உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நடைபெறவுள்ளது.  ஒவ்வோர் வட்டத்திலும், மாவட்ட அளவிலான அதிகாரிகள், கோட்டாட்சியர்கள் பங்கேற்று ஆய்வு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai