ஈரோடு கிழக்கு, மேற்குத் தொகுதிகளில் ரூ. 8 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணி

ஈரோடு கிழக்கு, மேற்குத் தொகுதிகளில் ரூ. 8 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

ஈரோடு கிழக்கு, மேற்குத் தொகுதிகளில் ரூ. 8 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியப் பகுதியில் குடிசைமாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 7.28 கோடியில் கட்டப்படும் அடுக்குமாடி 192 குடியிருப்புகள் கட்ட, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் முன்னிலையில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியை சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி. இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு  ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 7.50  லட்சத்தில் கட்டப்படவுள்ள சத்துணவு சமையல் கூடத்துக்கான பூமிபூஜையையும், சோலார் பகுதியில் ரூ. 7.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட நியாயவிலைக் கடை திறப்பு விழா, ஈரோடு பெரியார் நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கான்கிரீட் பிளாக் மூலம் தளம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜையையும், ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ. 37 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 4 அங்கன்வாடி மையங்களின் திறப்பு விழா ஆகிய திட்டங்களை தொடக்கிவைக்கப்பட்டன. 
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.பாலமுரளி, அதிமுக பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், சூரம்பட்டி ஜெகதீசன், முருகுசேகர்,  தலைமை ஆசிரியர் சுகந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com