அழிந்துபோன கொப்பு வாய்க்கால்கள்:பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு அளிக்கலாம்

சனப் பகுதியில் அழிந்துபோன கொப்பு வாய்க்கால்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர், பொதுப் பணித்

பாசனப் பகுதியில் அழிந்துபோன கொப்பு வாய்க்கால்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர், பொதுப் பணித் துறையினர் சான்றுகளுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்:
பவானிசாகர் அணைக்கு உள்பட்ட ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் நன்செய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு நெல் நடவுப் பணிகள் 1 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று வருகிறது.
பாசனத்துக்கு மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்ட பின் பாசனப் பகுதிகளில் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நில வாய்க்கால்களில் சென்று அடுத்த கீழ்பகுதிகளில் ஆர்ஜிதம் செய்யப்படாத கொப்பு வாய்க்கால்கள் மூலம் செல்கிறது. இத்திட்டம் பயனுக்கு வந்த பின் 1959 ஆம் ஆண்டின் வயல்வரப்பு சட்டப்படி ஆர்ஜிதம் செய்யப்பட்ட நில வாய்க்கால்களில் அடுத்து பட்டா நிலங்களில் கொப்பு வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு பாசனம் நடைபெற்று வந்தது.  
இந்நிலையில், பாசனப் பகுதிகளில் கொப்பு வாய்க்கால்கள் ஆங்காங்கே அழிக்கப்பட்டுள்ளதால் கடைமடைப் பகுதி பாசன நிலங்களுக்குத் தண்ணீர் சென்றடையாமல் அப்பகுதி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவரப் பட்டியலை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். எனவே, கொப்பு வாய்க்கால் அழிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கிராமம் புல எண், புல வரைபடம், கூட்டு வரைபடம், ஆயக்கட்டு என்பதற்கான கிராம நிர்வாக அலுவலர், பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் சான்று ஆகிய விவரங்களுடன் அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் ஈரோடு - மேட்டூர் சாலையில் உள்ள கீழ்பவானி முறை நீர்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகம், கவுந்தப்பாடி பகிர்மான கமிட்டி அலுவலகம் ஆகிய இடங்களில்  விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.   மேலும் விவரங்களுக்கு 98429-40845, 94880-67068, 98657-69793, 75022-09100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com