கோபியில் மாரத்தான் போட்டி

கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 
 போட்டிகளை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், சிறுமிகள், முதியவர்கள் என 5 பிரிவுகளில்  போட்டிகள்  நடத்தப்பட்டன. இதில், சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், பரிசுக் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.   இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா, கல்லூரித் தாளாளர், செயலர் பி.என்.வெங்கடாசலம், முதன்மை நிர்வாக அதிகாரி ஜெகதா லட்சுமணன், முதல்வர் மைதிலி, துணை முதல்வர்  எஸ்.ஏ.தனலட்சுமி, ,பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com