மார்பகப் புற்றுநோய் குறித்த கருத்தரங்கம்மார்பகப் புற்றுநோய் குறித்த கருத்தரங்கம்
By DIN | Published on : 16th September 2018 01:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோபி ரோட்டரி சங்கமும், திருச்சி ஸ்ரீரங்கம் டாக்டர் சாந்தா நினைவு அறக்கட்டளையும் இணைந்து, மார்பகப் புற்றுநோய் குறித்த கருத்தரங்கம், மார்பகப் புற்றுநோய் கண்டறியும் முகாமை சனிக்கிழமை நடத்தின.
இந்நிகழ்ச்சிக்கு, கோபி ரோட்டரி சங்கத் தலைவர் எல்.ஐ.சி. சீனு தலைமை வகித்தார். கோபி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் பி.டி.ஆனந்தன் முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினார். மருத்துவர்கள் எஸ்.குமரேசன், ஆண்டமுத்து, நந்திதா ஆகியோர் மார்பகப் புற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர். முகாமில், 54 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், ஈரோடு ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், ஆடிட்டர் பாலசுப்பிரமணியம், முன்னாள் ரோட்டரி ஆளுநர் ராஜாமணி, ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க திட்டத் தலைவர் ஜோதிவெங்கட்ராமன் செய்திருந்தார். ரோட்டரி சங்கப் பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.