கொத்தடிமைத் தொழிலாளர்கள் 33 பேர் செங்கல் சூளையில் மீட்பு

அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 12 குழந்தைகள் உள்பட 33 பேர் வருவாய்த் துறை அலுவலர்களால் சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.அந்தியூர் சுற்றுப்புறப் பகுதிகளான முனியப்பன்பாளையம், நகலூர்,


அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 12 குழந்தைகள் உள்பட 33 பேர் வருவாய்த் துறை அலுவலர்களால் சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.
அந்தியூர் சுற்றுப்புறப் பகுதிகளான முனியப்பன்பாளையம், நகலூர், சின்னத்தம்பிபாளையம், பிரம்மதேசம், பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு, ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தியூரை அடுத்த முனியப்பன்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றிய விழுப்புரம் மாவட்டம், ஆனங்கூரைச் சேர்ந்த செல்வம் கடந்த இரு நாள்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதியினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஈரோடு மாவட்டம், அதிகாரிகள் விசாரணையின்போது, அந்தியூர் பகுதியில் செங்கல் சூளைகளில் அதிக அளவில் கொத்தடிமைகள் அடைத்து வைக்கப்பட்டு, குறைந்த ஊதியத்தில் அதிக வேலை வாங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், இத்தகவலை கோபி கோட்டாட்சியர் (பொ) புகழேந்தியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து, கோபி கோட்டாட்சியர் (பொ) புகழேந்தி தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் கங்கா, விஜயலட்சுமி,
அலுவலர்கள் முனியப்பன்பாளையம் பகுதியில் உள்ள மூன்று செங்கல் சூளைகளில் நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது, விழுப்புரம்
மாவட்டம், ஆனங்கூர், பண்ருட்டி, திருக்கோவிலூர், எடந்தமங்கலம், கண்டம்பாடி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கொத்தடிமைகளாகப் பணியாற்றிய சேகர் (45), மாரியம்மாள் (35), நித்யா (35), நிவேதிதா (29), சுரேஷ் (24), சந்தீப் (28) உள்பட 10 ஆண்கள், 11 பெண்கள், 12 குழந்தைகள் உள்பட 33 பேரை மீட்ட அதிகாரிகள், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். மீட்கப்பட்ட அனைவரையும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, செங்கல் சூளை உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com