கொடுமுடி அருகே அரசியல் பிரமுகர் கொலை
By DIN | Published On : 01st April 2019 08:49 AM | Last Updated : 01st April 2019 08:49 AM | அ+அ அ- |

கொடுமுடி அருகே கொங்கு தேச மறுமலர்ச்சிக் கட்சியின் பிரமுகர் மர்ம நபர்களால் சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
கொடுமுடி அருகேயுள்ள வாழநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சிங்கம் சிவா (எ) சிவகுமார் (42). இவர் கொங்கு தேச மறுமலர்ச்சிக் கட்சியின் பிரமுகராக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர், வெங்கம்பூர் பேரூராட்சிக்குள்பட்ட வடக்குபுதுப்பாளையம் மயானத்தில் பலத்த ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் கிடந்துள்ளார்.
தகவலறிந்து அங்கு வந்த அவரது உறவினர்கள் சிவாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கொடுமுடி காவல் ஆய்வாளர் மணிகண்டன், பெருந்துறை டிஎஸ்பி ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து கொடுமுடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...