நஞ்சை காளமங்கலம் குலவிளக்கம்மன் கோயில் திருவிழா

மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை காளமங்கலம் குலவிளக்கம்மன் திருக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்கிழமை தொடங்கியது. 

மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை காளமங்கலம் குலவிளக்கம்மன் திருக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்கிழமை தொடங்கியது. 
மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை காளமங்கலத்தில் காவிரிக்கரையோரம் மத்திபுரீஸ்வரர் சுவாமி, கல்யாண வரதராஜபெருமாள், குலவிளக்கம்மன் ஆகிய மூன்று திருக்கோயில்கள் ஒன்றாக அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இறுதியில் திருத்தேர்விழா 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா குலவிளக்கம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் செவ்வாய்கிழமை இரவு தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம், பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. நல்லாத்தாள் சிறப்பு அபிஷேகம் ஆராதனை புதன்கிழமை மாலை நடைபெற்றது.
வியாழக்கிழமை மாலை தாழையடி கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஸ்ரீபூலோக நாயகி சமேதர மத்தியபுரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை, சனிக்கிழமை சீதேவி, பூதேவி சமேதர கல்யாண வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
பின்னர் ஞாயிற்றுகிழமை கொடி ஏற்றுதல், ஸ்ரீஅம்மன் சிம்மவாகனத்தில் வீதி உலாவும், திங்கள்கிழமை அம்பாள் விநாயகர் கேடயத்தில் திருவீதி உலா, செவ்வாய்கிழமை முப்பாட்டு மாவிளக்கு கண்ணுடையாம்பாளையத்தில் இருந்து புறப்படுதல், முப்பாட்டு மாவிளக்கு, ஊஞ்சல் பாட்டு பூஜையும், புதன்கிழமை பொங்கல் வைத்தல், வியாழக்கிழமை திருத்தேர் வடம் பிடித்தல், வெள்ளிக்கிழமை சுவாமி திருவீதி உலா, சத்தாவர்ணம், தெப்போற்சவம், சனிக்கிழமை அம்மன் குடிபுகுதல், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் இரா.முத்துசாமி மற்றும் தக்கார் ரமணிகாந்தன் மற்றும் கோயில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com