பெருந்துறையில் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு

திருப்பூர் மக்களவைத் தொகுதியின் செலவினம் பார்வையாளர், பெருந்துறை பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.  

திருப்பூர் மக்களவைத் தொகுதியின் செலவினம் பார்வையாளர், பெருந்துறை பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.  
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச் சாவடி,  நான்கு வழிச் சாலையில் உள்ள காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி செலவினப் பார்வையாளர் செளமியஜித் தாஸ் குப்தா புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.
மேலும், பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்க வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தை பார்வையிட்டார். பின்னர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  
அப்போது, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலருமான ஜெயராமன்,  பெருந்துறை வட்டாட்சியர் துரைசாமி, துணை வட்டாட்சியர் பரமசிவம், ஊத்துக்குளி வட்டாட்சியர் ரவீந்திரன்  ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com