சுடச்சுட

  

  கோபிசெட்டிபாளையம் அருகே கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
  ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இறைச்சிக் கடை வைத்துள்ளார். 
  இவரது மகன்கள் சந்தோஷ்குமார் (20), நந்தகுமார் (16). நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த நந்தகுமார் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். 
  அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன்கள் தினேஷ்குமார் (18), கதிரேசன் (14).  இதில் கதிரேசன் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது உறவினர் குழந்தைசாமி கோபி அருகே கருதம்பாடி புதூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கோபி அருகேயுள்ள சுள்ளிக்கரடுக் கோயில் திருவிழாவுக்காக நந்தகுமார், கதிரேசன் ஆகியோர் குழந்தைசாமியின் வீட்டுக்கு வந்துள்ளனர். 
  இதைத் தொடர்ந்து, தீத்தாம்பாளையம் அருகே செரங்கட்டுபுதூரில் உள்ள கல்குவாரியில் உள்ள நீரில் நந்தகுமார், கதிரேசன் ஆகியோர் நண்பர்களுடன் திங்கள்கிழமை குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
  இதைப் பார்த்த நண்பர்கள் ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த குழந்தைசாமி, கல்குவாரியில் இறங்கி நீரில் மூழ்கிய நந்தகுமார், கதிரேசன் ஆகியோரின் உடல்களை மீட்டார்.
  இதைத் தொடர்ந்து இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சிறுவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai