சுடச்சுட

  

  தேர்தல் புறக்கணிப்பு துண்டுப் பிரசுரம்:  அச்சக உரிமையாளர், விவசாயி மீது வழக்குப் பதிவு

  By DIN  |   Published on : 16th April 2019 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் புறக்கணிப்பு துண்டுப் பிரசுரம் அச்சடித்த அச்சக உரிமையாளர் மற்றும் மல்லியம்மன் துர்க்கம் விவசாயி ஆகியோர் மீது கடம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
  சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப் பகுதி மல்லியம்மன்துர்கம் கிராமத்தில் சாலை வசதி செய்து தரப்படாததால் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக துண்டுப் பிரசுரங்கள் கடம்பூர் மலைப் பகுதி, சத்தியமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன. 
  இதுகுறித்து  கடம்பூர் போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் மல்லியம்மன்துர்கம் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்தபோது, தாங்கள் துண்டுப் பிரசுரம் அச்சடிக்கவில்லை எனக் கூறியுள்ளனர். 
  இதையடுத்து மல்லியம்மன் துர்கம்  கிராமத்தைச் சேர்ந்த கல்கடம்பூர் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி (52) என்பவர் மல்லியம்மன் துர்கம் கிராம பொதுமக்களைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து துண்டுப் பிரசுரம் அச்சடித்து விநியோகித்ததாக விசாரணையில் தெரியவந்தது.  இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் அச்சடித்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் ஹரி (55), விவசாயி சுப்பிரமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பூர் காவல் நிலையத்தில் குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai