ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இதுகுறித்து ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் த.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலம் செய்ய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். 
குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டட ஒயரிங் மற்றும் மின்சாதனங்கள் ஆகியவற்றை சோதனை செய்து அவற்றுள் ஏதேனும் பழுதடைந்திருந்தால் உடனே மாற்றி புதுப்பிக்க வேண்டும்.
மழை பெய்யும்போது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் தொடவோ, அருகாமையில் செல்லவோ கூடாது. குழந்தைகள் பட்டம் விட்டு விளையாடும்போது அவர்கள் மேலே செல்லும் மின் கம்பிகளின் அருகில் செல்லாமல் இருக்குமாறு மிகுந்த கவனத்துடன், பெரியவர்கள் அவர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.
 இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் மின்சாதன சுவிட்சுகளை ஆப் செய்து வைக்கவும். டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் கட்டவோ, பந்தல் அமைக்கவோ கூடாது. மின் கம்பிகள் அல்லது மின் பாதைகளுக்கு கீழ் ஆடு, மாடு ஆகியவற்றை கயிற்றால் கட்டுவதோ அல்லது அத்தகைய இடங்களில் துணிகளை காயப்போடவோ கூடாது.
டிரான்ஸ்பார்மர் அருகில் அல்லது மின் பாதையின் கம்பிகளுக்கு அடியில் லாரிகளை நிறுத்தி பொருள்கள் ஏற்றவோ, இறக்கவோ வேண்டாம். 
உயர் அழுத்த, தாழ்வழுத்த மின் பாதைகளுக்கு மிக அருகாமையில் உள்ள மரக்கிளைகளை, உரிய துணை மின் நிலையம் மற்றும் அதற்கு உரிய பிரிவு அலுவலர், உதவி மின் பொறியாளரின் அனுமதி பெற்ற பிறகே வெட்ட வேண்டும். 
வீடுகளில் பயன்படுத்தும் மின் சாதனங்களையும், மின் மோட்டார்களையும் முறையான நிலஇணைப்பு(எர்த்) செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com