குளம், குட்டைகளில் நீர் நிரப்பிட நடவடிக்கை: அ.கணேசமூர்த்தி

ஈரோடு தொகுதியில் உள்ள குளம், குட்டைகளில் நீர் நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் திட்டம்

ஈரோடு தொகுதியில் உள்ள குளம், குட்டைகளில் நீர் நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி தெரிவித்தார். 
ஈரோடு மக்களவைத் தொகுதிக்குள்பட்ட முள்ளாம்பரப்பு, என்.ஜி.பாளையம், பூலப்பாளையம், செல்லப்பம்பாளையம், கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, புதுப்பாளையம்,சேமூர், சென்னிமலைபாளையம், சுள்ளிமேடு, பள்ளியூத்து, பூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஈரோடு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வாக்குச்சேகரிப்பில் திங்கள்கிழமை ஈடுபட்டார். 
அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும்போது விவசாயிகளின் அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும். சமையம் கேஸ் விலை பழைய முறையில் அமல்படுத்தி விலை குறைக்கப்படும். விவசாய நிலங்களைப் பாதிக்கும் உயர்மின் கோபுரங்கள், கெயில் மற்றும் பெட்ரோல் பைப் லைன் பிரச்னைக்கு தீர்வு,  நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். ஜிஎஸ்டி வரியில் மாற்றங்களைக் கொண்டு வந்து வரி விகிதம் குறைக்கப்படும், ஏழைக்குடும்பங்களின் வறுமையை போக்கிட மாதம் ரூ.6,000  வீதம் ஆண்டுக்கு ரூ.72,000  வழங்கப்படும். ஈரோடு மக்களவைத் தொகுதியில் குளம், குட்டைகளில் நீர் நிரப்பி நிலத்தடி நீர் மட்டம் மேம்படுத்தப்படும் என்றார்.  வாக்குச்சேகரிப்பின்போது திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com