சுடச்சுட

  

  ஈரோட்டில் சொத்து தகராறில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். 
   ஈரோடு, நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி  கணவருடன் வசித்து வருகிறார். ராமசாமி, மகன் நாராயணமூர்த்தி, மகள் தங்கமணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
   இதனிடையே சொத்து தொடர்பாக தந்தை, மகன் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக மீண்டும் அவர்களிடையே திங்கள்கிழமை மாலை பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது ராமசாமி தனது பெயரில் உள்ள வீட்டை தனது மகள் தங்கமணிக்கு எழுதிவைப்பதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த நாராயணமூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் ரீப்பர் கட்டையால் ராமசாமியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராமசாமியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.   இதுகுறித்து ராமசாமியின் மகள் தங்கமணி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நாராயணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai