சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்ட பிரசாரத்தையொட்டி  பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில்  இருசக்கர வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்தப் பேரணியை,  சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வழியாக சென்ற பேரணி, பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. அங்கு நடந்த பிரசாரக் கூட்டத்தில் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசியதாவது:
  ரூ.1,654 கோடி மதிப்பில் அத்திக்கடவு- அவிநாசி  திட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் துவக்கிவைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 32 மாதங்களில் பணி முடிக்கப்பட்டு, பெருந்துறை தொகுதியில் உள்ள அனைத்து குளம், குட்டைகளிலும் நீர் நிரப்பப்படும். பெருந்துறை தொகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க ரூ. 247 கோடி மதிப்பில் கொடிவேரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் இன்னும் 15 மாத காலத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
  பெருந்துறை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.பழனிசாமி,  திருப்பூர் மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர் இமயம் சந்திரசேகரன்,  ஈரோடு தெற்கு மாவட்ட தமாகா தலைவர் வி.பி.சண்முகம், பெருந்துறை நகர தேமுதிக தலைவர் தமிழ்நாடுபாபு,  ஒன்றிய பாமக பொறுப்பாளர் பாம்பேகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai