சுடச்சுட

  

  பெருந்துறையில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ. உயிரிழந்தார். 
  பெருந்துறை, முகமதியர் வீதியைச் சேர்ந்தவர் ஷா ஆலம் (65). காவல் துறையில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து 2014 இல் ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி அஜிம். மகன்கள் இப்ராஹிம், இம்தியாஸ். இவரது வீட்டில் மூன்றாவது மாடியில் கட்டுமானப் பணி நடக்கிறது. 
  தொழிலாளர்கள் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு தொழிலாளி, இரும்புக் கம்பியை எடுத்து சென்றபோது, அவ்வழியாக சென்ற, உயர் மின்னழுத்த கம்பியில் உரசியது. மின்சார தாக்குதலுக்கு ஆளான தொழிலாளி சப்தமிட்டார். இதைக் கேட்ட ஷா ஆலம் ஓடிச் சென்றார். தொழிலாளியைக் காப்பாற்றியபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஷா ஆலம் உயிரிழந்தார். தொழிலாளியான ஜாபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai