சுடச்சுட

  

  ரயில் பாதை பராமரிப்புப் பணி: ஈரோடு-சேலம் ரயில் சேவையில் மாற்றம்

  By DIN  |   Published on : 17th April 2019 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-சேலம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
   இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
  பள்ளிபாளையம் காவேரி ரயில் நிலையம்-ஈரோடு ரயில்வே சந்திப்பு இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் 17, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 
   இதன்படி 17 ஆம் தேதி கோவை-சேலம் பயணிகள் ரயில் ஈரோடு-சேலம் இடையே இயக்கப்படமாட்டாது. இதுபோல் சேலம்-கோவை பயணிகள் ரயில் சேலம்-ஈரோடு இடையே இயக்கப்படமாட்டது. இதுபோல் பிளாஸ்பூர்-திருநெல்வேலி அதிவிரைவு ரயில் ஜோலார்பேட்டை-ஆனங்கூர் இடையே 75 நிமிடம் தாமதமாக வரும்.  
    21 ஆம் தேதி ஹைதராபாத்-கொச்சுவெலி சிறப்பு ரயில் சேலம்-ஜோலார்பேட்டை இடையே 40 நிமிடங்கள் தாமதமாக வரும். 22 ஆம் தேதி கோவை-சேலம் பயணிகள் ரயில் ஈரோடு-சேலம் இடையே இயக்கப்படமாட்டாது. 
  சேலம்-கோவை பயணிகள் ரயில் சேலம்-ஈரோடு இடையே இயக்கப்படமாட்டது. இதுபோல் எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் ஓமலூர் ரயில் நிலையத்துக்கு 10 நிமிடம் தாமதமாக வரும். 
  ஆலப்புழா-தன்பாத் பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு சந்திப்புக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai