சுடச்சுட

  

  நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி  ஈரோட்டில் இந்திய வரைபடத்தை கோலமாக வரைந்து அதில் 1,008 அகல்விளக்குகள் ஏற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  
  ஈரோடு கொங்கு கலையரங்கம், கவிதாலயம் இசைப் பயிற்சி பள்ளி ஆகியன சார்பில் அண்மையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.எஸ்.கே.தங்கராஜ், கொங்கு ஆர்.வேலுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். 
  கொங்கு கலையரங்கம் தலைவர் சின்னசாமி, செயலாளர் ஆர். சுப்பிரமணியம், பொருளாளர் ஹரிராம் சந்துரு, ஆடிட்டர் கே.ஏ.கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மண்டல தலைமை வனப் பாதுகாவலர் வி.நாகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசினார். விழாவுக்கான ஏற்பாடுகளை கவிதாலயம் ராமலிங்கம் செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai