தேர்தல் பார்வையாளர்கள் சொந்த மாநிலம் திரும்பினர்

மக்களவைத் தேர்தல் பணிக்கு வந்த தேர்தல் பார்வையாளர்கள் வெள்ளிக்கிழமை தங்களது சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.மக்களவைத் தேர்தலில் விதிமுறைகளை வேட்பாளர்கள், கட்சிகள், பொதுமக்க

மக்களவைத் தேர்தல் பணிக்கு வந்த தேர்தல் பார்வையாளர்கள் வெள்ளிக்கிழமை தங்களது சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
மக்களவைத் தேர்தலில் விதிமுறைகளை வேட்பாளர்கள், கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் பின்பற்றுவதைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் சார்பில் பிற மாநிலத்தில் இருந்து தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதில் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு பொதுப் பார்வையாளராக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மாணிக் குர்ஷால், காவல் பார்வையாளராக சஞ்சய் ஹிந்துராவ் ஷிண்டே, செலவினப் பார்வையாளர்களாக பாலகிருஷ்ணா, சசிகாந்த் குஷ்வாஹா ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
வேட்பு மனு தாக்கலின்போது ஈரோடு வந்த பார்வையாளர்கள் வாக்குப் பதிவு நாள் வரையில் தங்களது அறிக்கைகளை தயார் செய்தனர். வேட்பாளர்களின் கணக்குகளையும் பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதில் பொதுப் பார்வையாளரான மாணிக் குர்ஷால் வாக்கு எண்ணிக்கை முந்தைய நாளான மே 22 ஆம் தேதி ஈரோட்டுக்கு வருவார். வாக்கு எண்ணிக்கை முடிவுற்று அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு மே 25 ஆம் தேதிக்கு மேல் சொந்த மாநிலத்துக்கு செல்வார். 
அதுபோல, கணக்கு பார்வையாளர்களும் மே 22 ஆம் தேதி வந்து வேட்பாளர்களின் கணக்குகளை ஆய்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவிட்டு செல்வார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com