விழுப்புரத்தில் ஏப்ரல் 27 இல் கரும்பு விவசாயிகள் மாநாடு

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு விழுப்புரத்தில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 


தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு விழுப்புரத்தில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.எம்.முனுசாமி மேலும் தெரிவித்ததாவது: 
கரும்பு ஆலையின் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு என்ற திட்டம் 2009 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது.  கூட்டுறவு மற்றும் பொதுத் துறை ஆலைகள் லாபத் தொகையில் பங்குத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கினர். தனியார் ஆலைகள் வழங்காமல் இழுத்தடித்தனர். 
இதுகுறித்த வழக்கில் நிலுவைத் தொகை ரூ.740 கோடியை கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை பெற அரசு அழுத்தம் தர வேண்டும் என விழுப்புரத்தில் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்துவோம். இந்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை அறிவிக்கப்படவில்லை. 
இதை உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் கரும்புக்கான விலையை மட்டுமே தனியார் ஆலைகள் வழங்குகின்றன. மாநில அரசு அறிவிக்கும் ஆதார விலையையும் இணைத்து வழங்க வேண்டும். இவ்வாறாக 2013-14 முதல் 2016-17 வரை ரூ.1,217 கோடி நிலுவை உள்ளது. இதனை ஆலைகள் வழங்க வேண்டும். தற்போது மத்திய அரசு 10 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்பு டன்னுக்கு ரூ.2,750 வழங்க உத்தரவிட்டுள்ளது. 8.5 சதவீத பிழிதிறன் மட்டுமே உள்ளதாக கூறி ரூ.2,612.50 மட்டுமே ஆலைகள் வழங்குகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். முழுத் தொகையும் வழங்க வலியுறுத்த உள்ளோம்.
 கடந்த ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு ரூ.200 கோடி ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. அதுபோல நடப்பு ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும். நடப்பு ஆண்டு கரும்புக்கான தொகை  டன்னுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும் என கோரி வருகிறோம். இதுவரை விலை அறிவிக்கப்படவில்லை. முன்புபோல லாபத்தில் பங்கு என்ற திட்டத்தை அரசு அறிவிக்க உள்ளதால் ஆதார விலை அறிவிக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறி வருகின்றனர். விவசாயிகளுக்கு லாபம் தரும் வகையில் தொகை அறிவிக்கப்பட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்துவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com