எழுமாத்தூர் பாரதியார் பல்கலை. கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்
By DIN | Published On : 27th April 2019 07:36 AM | Last Updated : 27th April 2019 07:36 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் சி.வடிவேல் தெரிவித்துள்ளதாவது:
எழுமாத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் 2019-20 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், பி.காம், பி.காம் (சி.ஏ), பி.சி.ஏ உள்ளிட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் தங்களது ஜாதிச் சான்றிதழ் நகலை சமர்ப்பித்து ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் ரூ. 50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.