கோபி கலைக் கல்லூரியில் 3, 4 இல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
By DIN | Published On : 27th April 2019 07:35 AM | Last Updated : 27th April 2019 07:35 AM | அ+அ அ- |

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் மே 3, 4 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு முறையில் இளங்கலை முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் வீ.தியாகராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோபி கலை, அறிவியல் கல்லூரியின் அரசு நிதி உதவி பெறும் பல்வேறு பாடப் பிரிவுகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முறையில் நடைபெறவுள்ளது.
பி.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணிப்பொறியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மே 3 ஆம் தேதியும், பி.ஏ. பொருளாதாரம் , பி.காம், பி.பி.ஏ. பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மே 4 ஆம் தேதி நேரடிச் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வில் மாணவ, மாணவிகளுக்கு அன்றைய தினமே பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை உறுதி செய்யப்படும்.
எனவே, விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் தங்களின் மதிப்பெண்கள் பட்டியல் மற்றும் பிறசான்றிதழ்களுடன் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் தவறாது காலை 8 மணிக்கு வந்து கலந்து கொள்ள வேண்டும்.