முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஆடிப் பண்டிகை: சென்னிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
By DIN | Published On : 04th August 2019 10:03 AM | Last Updated : 04th August 2019 10:03 AM | அ+அ அ- |

சென்னிமலை முருகன் கோயிலில் ஆடிப் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பண்டிகையையொட்டி கோயிலில் சனிக்கிழமை காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வள்ளி-தெய்வானை மற்றும் தன்னாசியப்பன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடிப் பண்டிகையையொட்டி, சென்னிமலை, மேற்கு புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள சோளியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
பெருந்துறை கோட்டை மாரியம்மன் மற்றும் வகையறா கோயில்களான செல்லியாண்டி அம்மன் கோயில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெருந்துறை ஓம்பராசக்தி கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.