முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
களைகட்டியது ஈரோடு புத்தகத் திருவிழா
By DIN | Published On : 04th August 2019 09:57 AM | Last Updated : 04th August 2019 09:57 AM | அ+அ அ- |

ஈரோடு புத்தகத் திருவிழா 2 ஆவது நாளான சனிக்கிழமை புத்தகப் பிரியர்களின் வருகையால் களை கட்டியது.
ஈரோடு புத்தகத் திருவிழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கலை இலக்கியம், காமிக்ஸ், குழந்தைகளின் நூல்கள், சமையல் புத்தகங்கள், இயற்கை விவசாயம் சார்ந்த நூல்கள் என வாசகர்களின் தேவைக்கேற்ப அனைத்து வகையான புத்தகங்களும் கிடைக்கின்றன. மேலும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத கழிவு விலையில் விற்கப்படுகின்றன.
கண்காட்சியில் திட்டமிட்டு நூல்களை வாங்கும் வாசகர்கள், அனைத்து அரங்குகளையும் பார்வையிட்டு நூல்களை வாங்கும் வாசகர்கள், பார்வையாளர்களாக வருபவர்கள் என எல்லாவரையும் ஒரு சேரக் காண முடிகிறது. எழுத்தாளர்களை வாசகர்கள் நேரில் சந்தித்து உரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
230 அரங்குகளில் பெரும்பாலானவற்றில் பல்வேறு புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆன்லைனில் புத்தக விற்பனை வந்தபிறகு தேவைப்படும் புத்தகங்களை வாங்கும் வாசகர்கள் இருந்தாலும் புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டும்
குறையவில்லை.
எண் 18 இல் தினமணி அரங்கு:
புத்தகத் திருவிழாவில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு, நியூ செஞ்சுரி புத்தக நிலையம், விகடன் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களின் சார்பில் 230 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் தினமணி நாளிதழும் அரங்கு அமைத்து(எண்18) தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வெளியீடுகளை விற்பனைக்காக வைத்துள்ளது.