முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
குறுமைய விளையாட்டுப் போட்டி: பெருந்துறை விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 04th August 2019 10:05 AM | Last Updated : 04th August 2019 10:05 AM | அ+அ அ- |

பெருந்துறை குறுமைய அளவிலான கைப்பந்து மற்றும் எறிபந்து போட்டிகள் ஸ்ரீஸ்வாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
விஜயமங்கலத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில், பெருந்துறை, ஸ்ரீஸ்வாமி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில், மூத்தோர் பிரிவில் முதலிடமும், இளையோர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர். எறிபந்து போட்டியில், மிக மூத்தோர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் மற்றும் இளையோர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர். முதலிடம் பெற்ற இப்பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரையும், பள்ளித் தலைவர் சின்னசாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் மாணிக்கமூர்த்தி, முதல்வர் சுப்பிரமணியன், ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.