முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பெருந்துறையில் ரூ. 2 கோடிக்கு கொப்பரை ஏலம்
By DIN | Published On : 04th August 2019 10:04 AM | Last Updated : 04th August 2019 10:04 AM | அ+அ அ- |

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 2 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 4,968 மூட்டைகளில் 2 லட்சத்து 40 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.91.35-க்கும், அதிகபட்சமாக ரூ.98.10-க்கும் விற்பனையானது.
இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.30.65-க்கும், அதிகபட்சமாக ரூ.91.85-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.