அந்தியூரில் கால்நடைச் சந்தை கூடியதால் ஈரோடு சந்தைக்கு வரத்து குறைவு
By DIN | Published On : 09th August 2019 08:55 AM | Last Updated : 09th August 2019 08:55 AM | அ+அ அ- |

அந்தியூரில் கால்நடைச் சந்தை கூடியதால் ஈரோடு சந்தைக்கு கால்நடைகள் வரத்து பெருமளவு குறைந்தது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. இதில் புதன்கிழமை கன்றுக்குட்டிகளும், வியாழக்கிழமை கறவை மாடுகள், எருமைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கோவா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச் செல்வர். இந்நிலையில் கருங்கல்பாளையத்தில் வியாழக்கிழமை கூடிய சந்தையில் 250 பசுக்கள், 200 எருமைகள் என மொத்தம் 450 மாடுகள் மற்றும் 150 கன்றுக்குட்டிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.
அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நான்கு நாள்கள் நடைபெறும் கால்நடைச் சந்தை தொடங்கியதால் பலர் கால்நடைகளை விற்பனை செய்ய அந்தியூர் சென்றுவிட்டனர். இதனால், ஈரோடு சந்தைக்கு வரும் விவசாயிகள், வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்ததோடு, கால்நடைகளும் வரவில்லை.