சுடச்சுட

  

  நம்பியூர் வட்டம், காவிலிபாளையத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெறவுள்ளது.
  ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், வேமாண்டம்பாளையம் உள்வட்டம், காவிலிபாளையம் கிராமம், செங்கபிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 10 மணிக்கு மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது.  
  மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்கவுள்ளனர். முகாமில் பொதுமக்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai