சுடச்சுட

  

  கீழ்பவானி கிளை, கொப்பு  வாய்க்கால்கள் சீரமைப்புப் பணி

  By DIN  |   Published on : 15th August 2019 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கீழ்பவானி கிளை, கொப்பு வாய்க்கால்கள் சீரமைப்புப் பணி நடைபெற்றது.
  ஈரோடு மாவட்டம், கீழ்பவானி பாசனத் திட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கொப்பு வாய்க்கால்கள் கட்டப்பட்டு பாசன சபைகள் அமைத்து 28 ஆண்டுக்கு மேலாகிறது. பல இடங்களில் கொப்பு வாய்க்கால் சேதம் அடைந்து, கடைமடை பகுதிகளுக்கு பாசன நீர் கிடைக்காமல், பாசனமின்றி நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, யு10 பாசன சபைக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் பிரிவு வாய்க்காலில், காஞ்சிகோவில் அருகே தம்பிக்கலை அய்யன்கோயில் அருகே உள்ள பகுதியில் வலது மதகு எண் 21 மூலம் பாசனம் பெறும் 96 ஏக்கருக்கான கிளை வாய்க்கால் சீரமைக்கப்பட்டது.
  அங்கு நீர் பிரிப்பு தொட்டி மூலம் மூன்றாக பிரிக்கப்பட்ட, உகந்த நீர் அளவு முறையில் பாசனம் நடைபெறுகிறது. தொட்டியின் இடது பகுதியில் பிரியும் கொப்பு வாய்க்கால் 24 ஏக்கர் பாசன பரப்பு கொண்டது. இந்த வாய்க்கால் கட்டப்பட்டு 27 ஆண்டுகள் ஆகும் நிலையில் 24 ஏக்கரும் முழுமையாகப் பாசனம் செய்ய இயலாத நிலை உள்ளது.
  எனவே, மதகு சங்கத் தலைவர் எம்.ஜெகநாதன் தலைமையிலான விவசாயிகள் இணைந்து யு10 பாசன சபைத் தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், பாசன சபை மூலம் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
  பகிர்மான கமிட்டி செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து சீரமைப்புப் பணிக்கு ஆகும் செலவு, தேவையான சிமென்ட் மூட்டைகளை வழங்கினர். 
  விவசாயிகள் தரப்பில் தலா ரூ. 5,250 வீதம் வசூலித்து, நீர் பிரிப்பு தொட்டி, பக்கவாட்டு சுவர், கொப்பு வாய்க்காலை முழுமையாக சீரமைத்தல், வண்டிப்பாதை செல்லும் பகுதியில் சிறு பாலம் அமைத்தல், புதிய தடுப்பான்கள் அமைத்தல் போன்ற பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை இரண்டு நாள்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 சதவீத நீரை சேமிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai