சுடச்சுட

  

  ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் மத்திய நூலகத் துறை, ஈரோடு மாவட்ட மைய நூலகம் இணைந்து நூலக அறிவியலின் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாளையொட்டி, நூலகர் தின விழாவைக் கொண்டாடினர்.
  விழாவுக்கு, ஸ்ரீ நந்தா அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன், நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம் ஆகியோர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் உருவப் படத்தைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். கல்லூரியின் மத்திய நூலகத் துறைத் தலைவர் டி.பிரகாஷ் வரவேற்றார். 
  சிறப்பு விருந்தினர் ஆருரன், இங்கிலாந்து வாழ் நூலகர் பிரதீபா, மகேஸ்வரி மதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
  இதில், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைச் செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai