சுடச்சுட

  

  பவானியில் பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. 
  பவானி பாலிடெக்னிக் கல்லூரி இளம் அரிமா சங்கம், எஸ்.எஸ்.எம். பார்மஸி கல்லூரி இளம் அரிமா சங்கங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை அரிமா சங்கங்களின் அமைச்சரவை இணைச் செயலாளர் கே.எஸ்.இளவரசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பவானி பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 
  பவானி புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலம் சங்கமேஸ்வரர் கோயில் அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் புற்றுநோய், அதன் பாதிப்புகள், புற்றுநோயாளிகளை அரவணைத்தல், புற்றுநோய்க்கான காரணங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், புகைப்பிடித்தல், புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. 
  இதில், பவானி - குமாரபாளையம் அரிமா சங்கச் செயலாளர் கே.ஸ்ரீனிவாசன், நிர்வாக அலுவலர் எஸ்.வாசுதேவன், ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலு, இணைச் செயலாளர் என்.ஜெகதீசன், மண்டலத் தலைவர் கோபி, வட்டாரத் தலைவர்கள் கதிர்வேல், தங்கராஜ், பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai