சுடச்சுட

  

  பேருந்து நிறுவன மேலாளரைத் தாக்கியதாக வனச்சரக அலுவலர் மீது வழக்கு

  By DIN  |   Published on : 15th August 2019 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேர்மாளம் அருகே தனியார் பேருந்து நிறுவன மேலாளரைத் தாக்கியதாக கேர்மாளம் வனச்சரக அலுவலர் மீது ஆசனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேர்மாளம் வனச்சரகத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கேர்மாளம் செக்போஸ்ட் பகுதியில் பேருந்து நிறுவன மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஜூலை 31 ஆம் தேதி கொள்ளேகால் சாலையில் அங்குள்ள காய்ந்துபோன விறகுகளை சேகரித்து வந்தார். அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்ட கேர்மாளம் வனச்சரக அலுவலர் விறகு சேகரிப்பது குறித்து ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார். 
  அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் வனச்சரக அலுவலர், ராஜேந்திரனைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த ராஜேந்திரன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றார். அப்போது அவரிடம் ஆசனூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கேர்மாளம் வனச்சரக அலுவலர் மீது ஆகஸ்ட்11 ஆம் தேதி  ஆசனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
  தற்போது இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் வனச்சரக அலுவலரின் முரளி என்ற பெயர் குறிப்பிடப்படாமல் அவரது பதவி மட்டுமே பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.    
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai