ஈரோடு மாவட்டத்தில் நீர்வழிப்பாதை கரைகளில் 6 கோடி பனை விதை நட திட்டம்: ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு

ஈரோடு மாவட்டத்தில்  நீர்வழிப்பாதை கரைகளில் 6 கோடி பனை விதைகள் நடவு செய்யப்படவுள்ளன. இதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில்  நீர்வழிப்பாதை கரைகளில் 6 கோடி பனை விதைகள் நடவு செய்யப்படவுள்ளன. இதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
ஈரோடு மாவட்டத்தில் நீர்வழிப்பாதை கரைகளில் பனை விதைகளை நடவு செய்து இயற்கையான முறையில் கரைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு 20 கோடி பனை மரங்கள் இருந்தன. போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது 2 கோடிக்கும் குறைவான பனை மரங்களே உள்ளன. பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், நீர்வழிப் பாதைகளை பலப்படுத்தவும், எல்லைகளை அறியவும் பனை வளர்க்க  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், வேளாண், வனத் துறை மூலமாக பனை மரங்கள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 10,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பனை நடவு செய்ய ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழ்பவானி, காளிங்கரயான் உள்ளிட்ட வாய்க்கால் நீர் வழிப் பாதைகளில் பனை வளர்ப்பதற்காக ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பனை மரம் நீண்ட காலம் வறட்சியைத் தாங்கி பலன் தரக்கூடியது.
இதனால், நீர் வழிப்பாதை, வாய்க்கால், காவிரி ஆறு, வாய்க்கால் போன்றவற்றின் கரைகளில் பனை விதை நட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கரைகளில் 6 கோடி பனை விதைகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com