ஈஷா நர்சரியில் இன்று பாரம்பரிய மரக்கன்றுகள் கண்காட்சி

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு அருகே செட்டிப்பாளையத்தில் உள்ள ஈஷா நர்சரியில்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு அருகே செட்டிப்பாளையத்தில் உள்ள ஈஷா நர்சரியில் பாரம்பரிய மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள் குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சி ஆகஸ்ட் 15, 16 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுவதற்காக ஈரோடு மாவட்டம், செட்டிப்பாளையத்தில் உள்ள ஈஷா நர்சரியில் வியாழன், வெள்ளி (ஆகஸ்ட் 15, 16) ஆகிய 2 நாள்கள் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை பாரம்பரிய மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள் கண்காட்சி நடைபெற உள்ளது. 
இந்தக் கண்காட்சியில் 65 வகையான நாட்டு மரக்கன்றுகள், 40 வகையான மூலிகைச் செடிகள், விதைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். நிழல் தரும் மரங்கள், பூ மரங்கள், பழ மரங்கள், டிம்பர் மரங்கள் என தனித்தனியாக பார்வைக்கு வைக்கப்படும். தற்போது இந்த நர்சரியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிலையில் தயாராக உள்ளன. இந்த ஆண்டு 6 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அரிய வகை மூலிகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சாமியாத்தாள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மூலிகைச் செடிகள் குறித்து உரையாற்றவுள்ளார்.  
பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இக்கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். அவர்களுக்கு ஈஷா பசுமைக் கரங்கள் அமைப்பின் தன்னார்வலர்கள் பல்வேறு மரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com