ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா: ரூ. 1.01 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 73 ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன்

ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 73 ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தேசிய கொடியை ஏற்றி 152 பயனாளிகளுக்கு ரூ. 1.01 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.   
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் 73 ஆவது சுதந்திர தின விழா ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரத்துக்காக பாடுபட்ட 87 சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கதராடை அணிவித்து கெளரவித்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 
தொடர்ந்து பல்வேறு அரசுத் துறை பணியாளர்கள்,  தன்னார்வலர்,  சமூக ஆர்வலர் என 335 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 152 நபர்களுக்கு ரூ. 1.01 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
அதைத் தொடர்ந்து, 7 அரசு, தனியார் பள்ளிகளைச் சார்ந்த 925 மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ், முதன்மைக் கல்வி அலுவலர் ரா.பாலமுரளி, ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணை ஆட்சியர் (பயிற்சி) ந.சிந்துஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோபிசெட்டிபாளையத்தில்...
கோபியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் சார்பில்  சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியர்  ஜெயராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் விஜயகுமார் தேசிய கொடியை ஏற்றினார்.
கோபி காவல் நிலையத்தில் காவல் துறை உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அருள்ஜோதி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். 
கோபி நீதிமன்றத்தில் கோபி 3 ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெகநாதன் தேசிய கொடியை ஏற்றினார். கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், கோபி நகராட்சியில் ஆணையர் தானமூர்த்தி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர்.
பள்ளி, கல்லூரிகள்:
கோபி  கலை,     அறிவியல்  கல்லூரியில், கல்லூரித் தாளாளர், செயலாளர் எம்.தரணிதரன் தேசிய கொடியை ஏற்றி, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளம் செஞ்சிலுவை சங்கம், சமுதாய சேவை கூட்டமைப்பு, உடற்கல்வி அமைப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை  ஏற்றுக்  கொண்டார். பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் வீ.தியாகராசு  பரிசுகள் வழங்கினார்.
பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில்...
கல்லூரித் தாளாளர், செயலாளர் பி.என்.வெங்கடாசலம்  தலைமையில், ஆசிரியர் ஜெகநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். 
கோபி எஸ்.கே. மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்நாதன் வாழ்த்துரை வழங்கினார். 
கல்லூரி முதன்மையர் ஜெகதா லட்சுமணன் வரவேற்றார். தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பாரதி வித்யாலயா கல்வி நிறுவனத்தில்...
பள்ளித் தாளாளர் பி.ஆர்.வேலுமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறந்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார். இதில், பள்ளி துணைத் தாளாளர் அமுதம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளியில்...
கல்லூரி முதல்வர் யு.மோகனசுந்தரம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி உதவி தலைமையாசிரியர் சென்னியப்பன் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜி.பி.கெட்டிமுத்து வாழ்த்துரை வழங்கினார். பள்ளி முதல்வர் து.ராஜா நன்றி கூறினார்.
ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப் பள்ளியில்...
பள்ளி முதல்வர் யு.மாரப்பன் வரவேற்றார். தாளாளர் செல்வம் தலைமையில், செயலாளர் ஆ.ஆ.ரங்கசாமி, பொருளாளர் சுப்பிரமணியம், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் சுகந்தி நன்றி கூறினார். 
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச பள்ளியில்...
பள்ளி முதல்வர் மகேஷ் கே.நாராயணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பள்ளி இயக்குநர்கள் ஜோதிலிங்கம், மோகன்குமார், பள்ளி துணை முதல்வர் முத்துவிஜயன், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
குமுதா மெட்ரிக் பள்ளியில்...
குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணைத் தாளாளர் சுகந்தி, இணைச் செயலாளர் டாக்டர் மாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றியமைக்காக கோபி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  பி.டி.ஆனந்தனுக்கு  ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

பவானியில்...
பவானி சுற்று வட்டாரப் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஐ.பெரியசாமி தேசியக் கொடியேற்றினார். 
சமூகப்  பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கிருஷ்ணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் எஸ்.ஜெயலட்சுமி, மண்டலத் துணை வட்டாட்சியர் அதிஷ்டராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி தேசியக் கொடியேற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, அலுவலர்கள் பங்கேற்றனர். பவானி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பாரி ஜான் கொடியேற்றினார். நகராட்சிப் பொறியாளர் கே.கதிர்வேல், மேலாளர் தங்கராஜ், பணியாளர்கள் பங்கேற்றனர். 
பவானி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் கொடியேற்றினார். தலைமையாசிரியர்கள் கோவிந்தராஜ், அருணாச்சலம், தேசிய மாணவர் படை அதிகாரி மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவர் கே.சிவலிங்கம் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எஸ்.செல்வமணி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் வி.பிரபாகரன் தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. 
அந்தியூர் பிரில்லியண்ட் மழலையர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தலைவர் காதர் கான் தேசியக் கொடியேற்றினார். அந்தியூர் தவிட்டுப்பாளையம் அரிமா சங்கத் தலைவர் வி.குருராஜ் மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் 
நடைபெற்றன.

சத்தியமங்கலத்தில்...
சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி ஈஸ்வரமூரத்தி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். 
சத்தியமங்கலம் காமதேனு கலை, அறிவியல் கல்லூரியில் தாளாளர் ஆர்.பெருமாள்சாமி கொடியேற்றி வைத்தார். சத்தியமங்கலம் லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் கே.என்.சந்திரசேகரன் தேசிய கொடியேற்றினார்.  சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் டாக்டர் சாமியப்பன் தேசிய கொடியேற்றினார். 
சத்தியமங்கலத்தை அடுத்த காந்தி பாலிடெக்னிக்கில் செயலாளர் ஜி.எஸ்.சிராஜூதின் தேசிய கொடியேற்றினார். இயக்குநர் கார்த்திக்,  முதல்வர் எஸ். பிரகதீஸ்வரன் இனிப்பு வழங்கினர். 
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் மைதிலி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மொடக்குறிச்சியில்...
மொடக்குறிச்சியில் பல்வேறு இடங்களில்  சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
மொடக்குறிச்சி தாலுகா, கனகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, அவல்பூந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. 
இதில், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கதிர்வேல், கலைமணி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பிரணவவர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
அவல்பூந்துறை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மகாலட்சுமி, மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் கெளசல்யா, அறச்சலூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் டார்த்தி, கொடுமுடி மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சபீனா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
ஸ்ரீ வேதாத்திரி பள்ளியில்...
மொடக்குறிச்சியை அடுத்த சாமிநாதபுரம் ஸ்ரீ வேதாத்திரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 18 ஆவது ஆண்டு விளையாட்டு போட்டிகளை சிறப்பு விருந்தினர் ரமேஷ் துவக்கி வைத்தார். பள்ளித் தாளாளர் சக்திவேல் வரவேற்றார்.  கபடி, வாலிபால், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கராத்தே, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 
நவரசம் பள்ளியில்...
பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தலைவர் எஸ்.சி.துரைசாமி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில், செயலாளர் சி.குமாரசாமி, பொருளாளர் பி.சிவகுமார், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com