Enable Javscript for better performance
சாலை விபத்தில்  முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
    பெருந்துறையை அடுத்த பவானி தேசிய 4 வழிச் சாலையில், பூவம்பாளையம் பிரிவில் முதியவர் வியாழக்கிழமை மாலை சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், தலை, உடலில் பலத்த அடிபட்ட அவரை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். 60 வயதான அந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. 
    இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai